Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 9, 2019

வருகை பதிவேட்டுடன் ஆதாரை இணைக்க விருப்பம் இல்லாத ஆசிரியர்கள் பதவியை ராஜினாமா செய்யலாம் ஐகோர்ட்டு கருத்து


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் வருகையை கண்காணிக்க ‘பயோ மெட்ரிக்’ வருகை பதிவேட்டுடன், ஆதாரை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து, அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்



இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூடுதல் அரசு பிளடர் ராஜபெருமாள் வாதிட்டார். இதையடுத்து மனுதாரர் தரப்பு வக்கீலிடம், நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்

ஏன் எதிர்ப்பு?

வருகை பதிவேடு முறையில் ஆதாரை இணைப்பதால், மனுதாரருக்கு என்ன பிரச்சினை? ஆதார் அவரிடம் இல்லை என்றால், புதிதாக விண்ணப்பித்து பெறவேண்டும். ஐகோர்ட்டு ஊழியர்கள் உள்பட அரசு ஊழியர்களின் வருகை பதிவேட்டில் ஆதார் இணைக்கப்பட்டு பல மாதங்களாகி விட்டது. அப்படி இருக்கும்போது, ஆசிரியர்கள் மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?’ என்று கேள்வி எழுப்பினார்



பின்னர், ‘தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களில் சிலர் பள்ளிக்கூடங்களுக்கு ஒழுங்காக வருவது இல்லை. ஆசிரியர் பணியை விட வேறு தொழிலையும் கவனிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது’ என்று நீதிபதி கூறினார்

ராஜினாமா

நான் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மீதும் குற்றம் சாட்டவில்லை. ஒருசிலர் செய்வதால், அரசு இந்த முறையை கொண்டுவந்துள்ளது. அரசு பணிக்கு வந்துவிட்டதால், அரசு கூறும் நிபந்தனைகளை ஏற்கவேண்டும்



வருகை பதிவேட்டுடன் ஆதாரை இணைக்க விருப்பம் இல்லை என்றால், ஆசிரியர்கள் தங்களது பதவியை ராஜினாமா தான் செய்ய வேண்டும்’ என்று கருத்து கூறிய நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை விரைவில் வழங்குவதாக உத்தரவிட்டார்