Breaking

Friday, April 12, 2019

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா?பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!





பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா? என்று பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஏப்.29ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.



பள்ளி வாகனத்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றவில்லை என்பது மனுதாரர் புகாராகும். திண்டிவனத்தை சேர்ந்த அஞ்சலி தேவி தனது மகள் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்ததற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.