Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 9, 2019

கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது; மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்!!!


கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது; மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்!!!
சென்னை : கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.



இந்த சுற்றறிக்கையில், கோடை காலங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது பற்றி பெற்றோர் தரப்பில் புகார்கள் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. உறவினர்களோடு பழகவும், உறவுகளை பற்றி தெரிந்து கொள்ளவும் மாணவர்களுக்கு விடுமுறை என்பது அவசியம்.



கோடை காலங்களில் வெப்பம் சார்ந்த நோய்கள் ஏற்பட கூடும். இதனால் மாணவர்களுக்கு கட்டாயம் ஓய்வு அவசியம். எனவே, மாணவர்கள் நலன் கருதி தனியார் பள்ளி கூடங்கள் மாணவ மாணவியருக்கு கோடை காலங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.