Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 29, 2019

தலைமுடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வேம்பு..!!



* தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேம்புவில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். தலைமுடி சரும பிரச்சனைகளால், முடி வேரிலும் பாதிப்பு அடையும். வேப்ப நீர் உபயோகித்து தலை அலசுவதினால், சுத்தம் ஆகும். முடி வளர்ச்சிக்கும் வேம்பு பயன்படும்.



* வேப்ப எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவதனால், தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராக அமைந்து முடி வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், இன்னும் ஆரோக்கியமானது. வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.



* மால்ஸ்சேசியா என்ற பூஞ்சையல் ஏற்படும் பொடுகு பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொடுகு, தலையில் இருக்கும் பிசுப்பிசுப்பான எண்ணெய் தேகத்தில் இருக்கும். பொடுகு பிரச்சனைகளால் அரிப்பு ஏற்படும்.



* வேப்ப எண்ணெய் உபயோகித்து, பொடுகுப் பிரச்சனையை போக்கலாம். தேங்காய் எண்ணெயுடன் வேப்ப இலைகள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின், சில எலுமிச்சை சாறு துளிகள் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை தலைமுடியில் தேய்த்து, இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இன்னொரு முறையாக, வேப்ப பொடி மற்றும் இலை சேர்த்த கலவையை பயன்படுத்தி வந்தால், பொடுகு நீங்கும்.