Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 14, 2019

எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலர் பணி!

மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் எல்லை பாதுகாப்பு படை எனப்படும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் (BSF)-இல், குரூப்-சி பிரிவின் கீழ் தலைமை காவலர் போன்ற பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள ஆண்கள், பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.



பணிகள்: 1. தலைமை காவலர் (Head Constable - Radio Operator) 2. தலைமை காவலர் (Head Constable - Radio Mechanic) காலிப்பணியிடங்கள்: 1. தலைமை காவலர் (Head Constable - RO) - 300 2. தலைமை காவலர் (Head Constable - RM) - 772 மொத்தம் = 1,072 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்க வேண்டிய நாள்: 14.05.2019 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.06.2019

முதற்கட்ட எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 28.07.2019

இரண்டாம் கட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகள்: 09.10.2019 மற்றும் 24.11.2019

மூன்றாம் கட்ட தேர்வு நடைபெறும் நாள்: 30.01.2020



வயது வரம்பு: (12.06.2019 அன்றுக்குள்)

1. பொது பிரிவினர் - குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 25 வயதும் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

2. ஓபிசி பிரிவினர் - குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 28 வயதும் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

3. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் - குறைந்தபட்சமாக 18 வயதும், அதிகபட்சமாக 30 வயதும் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

1. தலைமை காவலர் (Head Constable - RO) என்ற பணிக்கு, லெவல்-4 பிரிவின் கீழ் அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



2. தலைமை காவலர் (Head Constable - RM) என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.25,500 முதல் அதிகபட்சமாக ரூ.81,100 வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:

1. தலைமை காவலர் (Head Constable - RO) என்ற பணிக்கு, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கிணையான படிப்பு அத்துடன் 2 வருட ஐடிஐ படிப்பில் ரேடியோ அண்ட் டெலிவிசன் / எலக்ட்ரானிக்ஸ் / கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் & புரோகிராமிங் அசிஸ்டெண்ட் / ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ் / டேடா என்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது 12 ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் பயின்று 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.



2. தலைமை காவலர் (Head Constable - RM) என்ற பணிக்கு, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கிணையான படிப்பு அத்துடன் 2 வருட ஐடிஐ படிப்பில் ரேடியோ அண்ட் டெலிவிசன் / எலக்ட்ரானிக்ஸ் / கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் & புரோகிராமிங் அசிஸ்டெண்ட் / ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரீசியன் / ஃபிட்டர் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது 12 ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் பயின்று 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், www.bsf.nic.in - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம். தேர்வு செய்யப்படும் முறை: மூன்று கட்டமாக இந்த பணிக்கு ஆட்களை தேர்வு செய்யப்படுவர்.

1. முதற்கட்ட எழுத்து தேர்வு

2. இரண்டாம் கட்டத்தில் PST, PET & எழுத்து தேர்வு

3. மூன்றாம் கட்ட மருத்துவ தகுதி தேர்வு மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு,

http://bsf.nic.in/doc/recruitment/r0106.pdf