Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 3, 2019

எம்.பில்., பிஎச்.டி. படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவிப்பு


தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) பி.தியாகராஜன் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு திறந்த பல்கலைக் கழகத்தில் யுஜிசி அனுமதியுடன் முழுநேர, பகுதிநேர எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் ரெகுலர் முறை யில் வழங்கப்பட்டு வருகின்றன. எம்.பில். படிப்பில் தமிழ், வரலாறு, புவியியல், மேலாண்மையியல், இயற்பியல், உளவியல், சமூக வியல், மின்னணு ஊடகவியல், கல்வியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் உள்ளன.



அத்துடன் பிஎச்.டி. படிப்பில் தமிழ், பண்டைய வரலாறு மற் றும் தொல்லியல், புவியியல், மேலாண்மையியல், இயற்பி யல், வேதியியல், விலங்கியல், கல்வியியல், மின்னணு ஊடகவி யல் ஆகிய பாடப்பிரிவுகளும் உள்ளன. யுஜிசி ஜெஆர்எப் (ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப்) தகுதிபெற்ற வர்கள் யுஜிசி நிதியுதவியுடன் பிஎச்டி-யில் ஆய்வு மேற்கொள்ள லாம். 2019-ம் ஆண்டு ஜூலை பருவ எம்.பில்., பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப் பிக்கலாம்.



விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கவுரையை பல் கலைக்கழகத்தின் இணையதளத் தில் (www.tnou.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப் பிக்க கடைசி நாள் மே 29-ம் தேதி ஆகும்.