Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 5, 2019

அசத்தல்! பனை, தென்னை, பாக்கு மரக்கழிவுகளில் குழந்தைகள் உருவாக்கிய அழகிய பொருட்கள்



பள்ளி விடுமுறை காலமான இந்த கோடையில் 'டிவி', அலைபேசியில் குழந்தைகள் வீணாக பொழுதுபோக்குவதை தடுக்க மதுரையில் பனை, தென்னை, பாக்கு, வாழை மரக்கழிவுகளில் இருந்து அழகிய பொருட்கள், உருவங்களை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.'கிராப்டி' என்ற அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


அவர்களுக்கு புதுச்சேரி மணல் சிற்ப கலைஞர் உமாபதி மற்றும் குழுவினர் பயிற்சி அளித்தனர். இதன் ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா கூறியதாவது: நான் பல வெளிமாநிலங்களுக்கு சென்றுள்ளேன். அங்குள்ள மாணவர்கள் டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என நினைப்பதில்லை. பேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் தமிழகத்தில் டாக்டர், இன்ஜினியரிங் மட்டும்தான் மாணவர்களான நோக்கமாக உள்ளது.என் மகளுக்கு டிசைனிங் துறை மீது ஆர்வம் இருந்தது. மதுரையில் அதுதொடர்பான பயிற்சி கொடுக்க திருப்தியான கோச்சிங் மையங்கள் இல்லை.



இதேபோல் மற்ற குழந்தைகளுக்கும் எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும். அதனால் இந்த கோடையில் முதன்முறையாக கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கொடுத்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உருவாக்கினார்கள். அவர்களின் அம்மாக்களும் கேட்டுக்கொண்டதால் அவர்களுக்கும் பயிற்சி அளித்தோம். குழந்தைகள், பெண்கள் உருவாக்கிய கைவினைப்பொருட்களை இன்று (மே 5) மாலை 5:00 மணி முதல் மதுரை காமராஜர் ரோடு வி.எஸ். செல்லம் மகாலில் கண்காட்சியாக வைத்துள்ளோம். அனுமதி இலவசம், என்றார்.