Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 13, 2019

குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை - டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்


குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று ஒப்புதல் அளித்ததுள்ளது டிஎன்பிஎஸ்சி.
கடந்த மார்ச் மாதம் 1 லட்சத்து 68ஆயிரம்பேர் எழுதிய குரூப்-1 தேர்வின் முடிவுகள் ஏப்ரலில் வெளியானது.
ஆனால் தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 18-க்கும் மேற்பட்ட கேள்விகள் தவறு என்று புகார் எழுந்தது.இதனால் தேர்வாளர்கள் விக்னேஷ் உள்ளிட்டோர் தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் வெளியிடக்கூடாது என்று டிஎன்பிஎஸ்சிக்கு மனு ஒன்றை அளித்தனர்.ஆனால் டிஎன்பிஎஸ்சி கோரிக்கையை ஏற்க மறுத்து தேர்வு முடிவுகளை வெளியிட்டது.




இதன் பின் விக்னேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதில் பதில் அளிக்கப்பட்டது.அதில், குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என்று ஒப்புதல் அளித்தது.இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம், 'டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வில் குளறுபடிகளை அனுமதிக்க முடியாது. 17ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.