Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 12, 2019

உங்கள் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்புறீங்களா ? இந்தா பிடிங்க 15 ஆயிரம் !! அம்மாக்களுக்கு முதலமைச்சரின் அதிரடி திட்டம் !! எங்கு தெரியுமா?

அமைச்சர்கள் தவறு செய்தாலும், அவர்கள் மீது ஊழல் முறைகேடு புகார்கள் வந்தாலும் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதோடு அமைச்சர் பதவியிலிருந்தும் இருந்தும் நீக்கப்படுவார்கள் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
அண்மையில் நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஜெகன் மோகன்ள அம்மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 5 துணை முதலமைச்சர்கள் உட்பட 25 பேர் அமைச்சர்களாக பொறுப்போற்றுக் கொண்டனர்



இந்நிலையில் ஆந்திர மாநில அமைச்சரவையின் முதல் கூட்டம் ஜெகன்மோகன் தலைமையில் நேற்று நடந்தது.

இதில் புதிதாக பதவியேற்ற 25 அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய , செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பேரணி நானே முதலமைச்சர் தொடங்கி கிராமத்தில் உள்ள அதிகாரிகள் வரை யாரும் ஊழல் செய்யக்கூடாது என்பதே ஜெகன் மோகனின் முக்கிய நோக்கம் என தெரிவித்தார்.

ஊழல் இல்லாத மாநிலம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார். எனவே இரண்டரை ஆண்டு பதவியில் இருக்கும் அமைச்சர்கள் என்ன செய்தாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்.



அமைச்சர்கள் தவறு செய்தாலும், ஊழல் முறைகேடு புகார்கள் வந்தாலும் அவர்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதோடு, பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என ஜெகன் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து குழந்தைளும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஜனவரி 26ம் தேதி முதல் பள்ளி செல்லக்கூடிய குழந்தையின் தாயாருக்கு ரூ15 ஆயிரம் வழங்கப்படும். அது அரசு பள்ளியில் படிக்க வைத்தாலும், தனியார் பள்ளியில் படிக்க வைத்தாலும் அந்த குழந்தையின் தாயாருக்கு ரூ.15 ஆயிரம் நிதி வழங்கப்படும் என கூறினார்.



இதுவரை ரேஷன் பொருட்களை கடையில் சென்றுதான் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இனி அவ்வாறு இல்லாமல் கிராம தன்னார்வலர்கள் மூலமாக நேரடியாக பயனாளிகள் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கப்படும் என்றும் செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.