Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 16, 2019

கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி அசோக் லேலண்ட், டிவிஎஸ் நிறுவனம் ஏற்பாடு


கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க அசோக் லேலண்ட், டிவிஎஸ் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. வாகன தயாரிப்பு நிறுவனங் களான அசோக் லேலண்ட் நிறு வனமும், டிவிஎஸ் நிறுவனமும் கனரக வாகன ஓட்டுநர்களின் குழந்தைகளுக்கு மேற்படிப்புக்கு நிதியுதவி அளிக்க முன்வந் துள்ளன. இந்த நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோரின் தந்தை, கனரக வாகன ஓட்டு நராக இருக்க வேண்டும்.

கனரக வாகனத்தின் உரிமையாளராக வும் ஓட்டுநராகவும் ஒருவரே இருப்பின், அவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களின் உரிமை யாளராக இருக்கக் கூடாது. அவர்களின் குழந்தைகள் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பள்ளியில் இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். விண்ணப்பதாரர்களில் அதிக மதிப்பெண் பெற்ற 10-ம் வகுப்பு முடித்த மாணவ - மாணவியரில் 115 பேரும் இதேபோல், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள 60 பேரும் தேர்ந் தெடுக்கப்படுவர். 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 2 ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் மேல்நிலை படிப்புக்காக வழங்கப்படும். 12-ம் வகுப்பு முடித்தவர் களுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 3, 4, 5 ஆண்டுகளுக்கு முறையே ரூ.75 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.1.25 லட்சம் (படிப்பு காலத்துக்கு ஏற்ப) வழங்கப் படும். விண்ணப்ப படிவம் பெற... இதற்கான விண்ணப்ப படிவங் களை www.ashokleyland.com என்ற இணையதளத்தில் பதிவிறக் கம் செய்துகொள்ளலாம்.

இது தொடர்பான விவரங்களை மாவட்ட லாரி மற்றும் பஸ் உரிமை யாளர்கள் சங்க அலுவலகங்கள், தமிழகத்தில் உள்ள அசோக் லேலண்ட் மற்றும் டிவிஎஸ் கிளை களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய 9952677360, 9597930136 மற்றும் 9952874561, 9791031165 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளளாம். இத்தகவலை அசோக் லேலண்ட், டிவிஎஸ் நிறுவனங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.