Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 15, 2019

இனி எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்.. எந்த கட்டணமும் கிடையாது.. ஆர்பிஐ அதிரடி!



நாளுக்கு நாள் தொடர்ந்து இணைய சேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த நிலையில் வங்கிகளும் இணையதள சேவைகளான நெட் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கையில் பணபுழக்கத்தை குறைத்து டிஜிட்டல் கரன்சிகளை ஊக்குவித்து வருகிறது அரசு. இது குறித்து கடந்த வாரம் இந்திய ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டிருந்த அறிக்கையில் விரைவில் நெட் பேங்க்கிங் கட்டணங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து தற்போது அதற்கான கட்டணங்களை அறிவித்துள்ளது.


குறிப்பாக ரியல் டைம் செட்டில்மென்ட் சிஸ்டம் (RTGS), இது பெரிய பண பரிமாற்றங்களுக்கான உடனடி பரிமாற்ற சேவையாகும். நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முன்னர் நெப்ட் பண பரிவர்த்தனைக்கு ரூபாய் 1 - 5 வரை கட்டணமாக வசூலிக்கிறது. இதே ஆர்.டி.ஜி.எஸ் கட்டணமாக ரூ. 5 - 50 வரையிலும் வசூலித்து வருகிறது.
ஆனால் இனிமேல் இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்காது. ஆமாங்க.. இனி வரும் நாட்களில் நெட் பேக்கிங்கில் அனுப்பப்படும் ட்ரான்க்சேக்ஷன் முறையே நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் சேவைகளுக்கு இனி கட்டணமே கிடையாது. இந்த முறைகளுக்கு இனி எந்த கட்டணம் வசூலிக்க கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் ஜுலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும். வெளிப்புற பரிவர்த்தனைக்களுக்கு மட்டுமே இனி கட்டணம் விதிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


இனிமேல் வெறும் ஐஎம்பிஎஸ் சேவைகளுக்கு மட்டுமே வங்கிகளை பொருத்து கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் கூறுகையில், RTGS - NEFT சேனல்களில் மட்டும் பணப்பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த ஏப்ரல் 2014ல் 75.5 டிரில்லியன் ரூபாயாக இருந்த பண பரிவர்த்தனை, கடந்த ஏப்ரல் 2019ல் 169 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது கவனிக்கதக்கது என்றும் கூறியுள்ளார்.