Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 13, 2019

புதுக்கோட்டையில் சைல்டு லைன் சார்பில் குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு பேரணி



புதுக்கோட்டை,ஜீன்.12: புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் குழந்தைகளை பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.



பேரணியை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமையில் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் எனது குழந்தைகளை நான் ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும்,குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும் ,தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி அனைவரும் எடுத்துக் கொண்டனர்.



பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதிராஜ் கூறும் பொழுது: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் நோக்கமே குழந்தைத் திருமணத்தை தடுத்தல்,பாலியியல் வன்கொடுமை தடுத்தல்,சட்ட ரீதியான தத்தெடுத்தலை நடைமுறைப்படுத்துதல்,குழந்தைகளுக்கு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உறுதி செய்தல் ,குழந்தைகள் இல்லங்கள் முறைப்படுத்துதல் ,ஆதரவற்ற குழந்தைகளை இல்லங்களில் சேர்த்து படிக்க வைத்தலே என்றார்.

பேரணியானது நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி,பழைய பேருந்து நிலையம்,அண்ணா சிலை வழியாக புதுக்கோட்டை பல்நோக்கு சமூக சேவை சங்க அலுவலகத்தில் முடிவடைந்தது.



பேரணியில் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தன்னார்வ சுய உதவிக் குழுவினர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பிடித்துக் கொண்டு கோஷங்களை எழுப்பிக் கொண்டே சென்றனர்.

பேரணியில் இலுப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் இரா.சிவக்குமார் ( பொறுப்பு), புதுக்கோட்டை பல்நோக்கு சமூக சேவை சங்க இயக்குநர் ஜேம்ஸ்ராஜ் மற்றும் சுய உதவிக் குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.