Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 11, 2019

பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி!



ஈராேட்டில், மத்திய அரசின், தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ், கிராப்புற ஏழை பட்டதாரி இளைஞர்களுக்கு, ஊக்கத்துகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் பலனடைய விரும்புவோர், வரும், 12 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈராேட்டில், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை பட்டதாரி இளைஞர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக, அவர்களுக்கு சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் சிறந்த பணியை, மத்திய ஊரக வளர்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது.




தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் வசிக்கும், 18 - 35 வயதுக்குட்பட்ட பட்டதாரி இளைஞர்களுக்கு, 11 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இம்முறை, அக்கன்டஸ் எக்சிகியூடிவ் பயிற்சி அளித்து, அந்த பயிற்சியை நிறைவு செய்தோருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பயிற்சியில் சேர்ந்து பலனடைய விரும்புவோர், வரும் 12 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம் என, அதை ஒருங்கிணைத்து நடத்தும், தமிழ்நாடு, இட்காட் நிறுவனம் அறிவித்துள்ளது. நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், சி.எஸ்.ஐ., ஆசிரியர் பயிற்சி நிறுவனம், எஸ்.கே.சி., ரோடு, பி.எஸ்.,பார்க் அருகில், ஈரோடு.



காலை 10 மணி முதல் நடைபெறும் இந்த நேர்முகத்தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் மற்றும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் பயிற்சிைய நிறைவு செய்யும் அனைவருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும்.