Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 29, 2019

ரயில்வேயில் பொறியாளர் பட்டதாரிகளுக்கு வேலை



இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள JR Technical Associate (Electrical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள்:

JR Technical Associate (Electrical) பிரிவில் 05 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது பொறியியல் துறையில் படித்திருக்க வேண்டும்.

ஊதியம்:



ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு:

33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பெண்கள் ரூ.250 விண்ணப்பக் கட்டணம் ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.cr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின் விண்ணப்பித்ததை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



Sr.DFM/SUR, Central Railway,

Divisional Railway Manager's Officer,

Modikhana, Solapur - 413 001.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2019

பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 14.08.2019