Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 4, 2019

கல்வித்துறை அதிரடி முடிவு பள்ளிகளில் கலை, நீதி போதனைக்காக இனி அரை மணி நேரம் அதிகரிப்பு


பள்ளிக் கல்வித்துறையில் 190 நாளாக உள்ளது. இனி அதை அதிகரிக்க தினமும் அரைமணிநேரம் கூடுதலாக பாடங்கள் நடத்தப்படும். சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்து பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி அதிகரித்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.28 ஆயிரத்து 757 கோடியே 62 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. நடப்பு 2019-2020ம் ஆண்டுக்கு ரூ. 28,757.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ. 1,551.74 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணி நாட்கள் 190 நாளாக இருக்கிறது.



தற்போது ஒவ்வொரு நாளும் அரைமணிநேரம் கூடுதலாக்கி அந்த நேரத்தில் மாணவர்களுக்கு கலை, நீதிபோதனை உள்ளிட்ட பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதை அடுத்து, உத்திரபிரதேச துணை முதல்வர் தினேஷ் வர்மா தமிழகம் வந்து பார்த்துவிட்டு புத்தகங்களில் இடம் பெற்றுள்ள QR code முறையை பாராட்டியுள்ளார். இதையடுத்து, யூ டியூப் மூலம் பாடங்கள் கற்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் 2381 அங்கன்வாடி மையங்களில், ரூ.7.73 கோடி செலவில் தொடங்கி இதுவரை 52 ஆயிரத்து 933 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறைக்கென தனியாக கல்வி தொலைக் காட்சி தொடங்கப்பட்டு சோதனை ஒளிபரப்பு பணிகள் நடக்கிறது.



அரசுப் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த கல்வி ஆண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் 65,129 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 24 ஆயிரத்து 600 லேப்டாப்கள் வழங்கப்பட்டது போல, ரூ.37 கோடியே 86 லட்சம் செலவில் 29 ஆயிரத்து 891 முதுநிலை ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும். மதுரையில் ரூ.6 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைப்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடர்கிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், அனைத்துப் பகுதிகளிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாசகர்களுக்குத் தேவையான புத்தகம் எந்தப் பகுதியில் உள்ளது என்பதை இணையம் மூலமாக டிராக் செய்து தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.



ஆங்கில வழி மாணவர்களுக்கு கட்டணம் ரத்து
அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கக கட்டுப்பாட்டில் வரும் 300-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு இணைய வழி மூலமாகவும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகின்றது. தனியார் பள்ளிகளை முறைப்படுத்துதல், சட்டமுன்வடிவு பேரவையின் ஒப்புதல் பெற்று குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ெபறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆங்கிலவழிக் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. இந்தாண்டுமுதல் பொதுப் பிரிவு மாணவர்களும் பயன்பெறுவார்கள் என்றார்.