Join THAMIZHKADAL WhatsApp Groups

நூலகங்களை பயன்படுத்தி போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்' என, பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.கரூர் மாவட்ட நூலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. அதில், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது: பயிற்சி வகுப்புகள் மூலம், போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்தி, மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும். பல வீடுகளில் பெண்களுக்கு படிக்கும் சூழ்நிலை இல்லாத நிலை உள்ளது.
அவர்கள் இதுபோன்ற நூலகங்களை பயன்படுத்தி அரசு வேலை தேர்வுகளில் வெற்றி பெறலாம். வாழ்க்கையில் விடாது போராடி ஜெயிக்க வேண்டும். போட்டி நிறைந்த உலகில் பெண்கள் வெற்றி பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு புறச் சூழ்நிலைகள் நமக்கு சவாலாக இருக்கும். அதற்கு இடமளிக்காமல் முயற்சி மேற்கொண்டால் தான் தேர்வில் பெற்றி பெறமுடியும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், கல்வி அலுவலர்கள் சிவராமன், கபீர், மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.