Join THAMIZHKADAL WhatsApp Groups

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் இருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில்லை என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மடிக்கணினி வழங்கும் விவகாரத்தில், முதலில் தற்போது பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கி வருகிறோம் .ஏற்கனவே படிப்பை முடித்த மாணவர்களுக்கும் பின்னர் வழங்கப்படும் என்று பேசினார்.