Join THAMIZHKADAL WhatsApp Groups

ஒய்.ஆண்டனி செல்வராஜ்
நீட்', 'ஜே.இ.இ' தேர்வுகளில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் சாதிக்க தமிழகத் திலேயே முதல் முறையாக மதுரை மாநகராட்சியில் 'டாப் ஸ்டூடன்ட்ஸ்' கிளாஸ்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 15 மாநகராட்சி மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி படிக்க தேசிய அளவில் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் வந்துள்ளன.
இதில், மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' தேர்வும், பொறியியல் படிப்புக்கு ஜே.இ.இ தேர்வும் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியத் தேர்வுகளாகக் கருதப்படுகிறது. இந்தத் தேர்வுகளில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே சாதிக்கின்றனர். மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல், நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி இல்லாமல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப்படிப்புகள், பொறியியல் படிப்புகளில் சேர முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் மாநகராட்சிப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களின் மருத் துவம் மற்றும் பொறியியல் படிப்புக் கனவை நனவாக்கும் வகையில் 'டாப் ஸ்டூடன்ட்ஸ்' கிளாஸ்' என்ற புதிய திட்டம் இந்தக் கல்வி ஆண்டு முதல் தொடங் கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் கூறியதாவது: மாநகராட்சிப் பள்ளிகளிலும் சிறந்த மாண வர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கும் மருத்துவர், பொறியாளராகும் கனவு உள்ளது. ஆனால், வெவ்வேறு மாநக ராட்சிப் பள்ளிகளில் படிப்பதால் அவர் களுக்கு ஒரு பொதுவான வழிகாட்டுதல், சிறப்பு வகுப்புகள் மற்றும் தேசிய நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வழங்க முடியவில்லை.
அதனால், தற்போது 15 மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஒருங்கிணைத்து மாநகராட்சி நிர்வாகம் 'டாப் ஸ்டூடன்ட்ஸ்' கிளாஸ்' உருவாக்கியுள்ளோம். இந்த 'டாப் ஸ்டூடன்ட்ஸ்' கிளாஸ்' தெற்கு வெளி வீதியில் உள்ள மாநக ராட்சி ஈவெரா மேல்நிலைப்பள்ளியில் உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 25 சிறந்த மாணவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு மாநகராட்சிப்பள்ளி ஆசிரி யர்களைக் கொண்டு தினமும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதுபோல், சனி, ஞாயிற்றுக்கிழமை களில் பிளஸ் 1 வகுப்பில் இருந்தே மருத்துவம், பொறியியல் படிப்புக்கான 'நீட்' , ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாநகராட்சிப் பள்ளிகளிலே இந்த 'டாப் ஸ்டூடன்ட்ஸ்' கிளாஸ்' வகுப்பறை முன்மாதிரியாக அமைந்துள்ளது.
மாணவர்கள் 'குளு குளு' வசதியுடன் படிக்க ஏசி வசதி, வைஃபை இன்டர் நெட் வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. தனியார் பள்ளிகளைப் போல் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களும் இனி அதிகளவு மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இந்தத் திட்டம் உதவும். சிறந்த மாணவர்கள், ஒரே வகுப்பறையில் இடம்பெறுவதால் அவர்களிடையே யார் அதிக மதிப்பெண் எடுப்பது என்பதில் போட்டி உணர்வு ஏற்படும்.
இந்த மாணவர்களுக்குத் தனி வகுப்பறை கால அட்டவணையை மாநகராட்சி உரு வாக்கியுள்ளது. அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்புத் தேர்வு நடத்தி, மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுக்க வைக்க பிரத்தியேக வழிகாட்டுதல், பயிற்சிகள் வழங்கப்படும், '' என்றார்.