Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 10, 2019

பொறியியல் படிப்புக்கு நுழைவு தேர்வு கிடையாது: ஏஐசிடிஇ தலைவர் தகவல்


பொறியியல் படிப்புக்கு நுழைவு தேர்வு கிடையாது: ஏஐசிடிஇ தலைவர் தகவல் மருத்துவ படிப்புக்குப் போல, பொறியியல் படிப்பபுக்கு தேசிய அளவிலான நுழைவு தேர்வு கிடையாது என்று ஏஐசிடிஇ தலைவர் தெரிவித்து உள்ளார்.




தற்போது நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நீட் தேசிய தேர்வு நடைமுறைப்பட்டு உள்ள நிலையில், பொறியியல் படிப்புக்கும் தேசிய நுழைவு தேர்வு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு கொண்டு வர தீர்மானிக்கப்பட்ட தாகவும், தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் தலைவர் அனில் ஷாஷாபுதே (Prof. Anil D. Sahasrabudhe) தெரிவித்துள்ளார். ஆனால, மாநில பாடத்திட்டத்தில் சமநிலை கொண்டுவரப்பட்ட பின், மீண்டும் நுழைவுத்தேர்வு முறை நடைமுறை படுத்தப்படும் என்றும் கூறினார்.