Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 10, 2019

செப்டம்பர் 16ம் தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு?



சென்னை: செப்டம்பர் 16ம் தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐகோர்ட் உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் கலந்தாய்வு செப்டம்பர் 16ல் தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மே மாதம் நடைபெறுவதாக இருந்த கலந்தாய்வு செப்டம்பர் 16ல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஆசிரியர் கலந்தாய்வு EMIS இணையதளத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.பணியிட மாற்றத்துக்கு ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் கட்டாயமாக பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.