Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 23, 2019

வரலாற்றில் இன்று 23.08.2019


ஆகஸ்டு 23 (August 23) கிரிகோரியன் ஆண்டின் 235 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 236 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 130 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1305 – ஸ்கொட்லாந்தின் நாட்டுப்பற்றாளர் வில்லியம் வொலஸ், இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னனால் நாட்டுத்துரோத்துக்காகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
1541 – பிரெஞ்சு நாடுகாண் பயணி ஜாக் கார்ட்டியேர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தார்.
1555 – நெதர்லாந்தில் கால்வினிஸ்துகளுக்கு முழுமையான உரைமைகள் வழங்கப்பட்டன.
1784 – மேற்கு வட கரோலினா (தற்போது கிழக்கு டென்னசி) பிராங்கிளின் என்ற பெயரில் தனி நாடாக அறிவித்தது. இது ஐக்கிய அமெரிக்காவால் ஏற்கப்படவில்லை.
1821 – மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1839 – சீனாவின் கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கைக் கைப்பற்றியது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜப்பான் ஜெர்மனியுடன் போரை அறிவித்தது.
1929 – பாலஸ்தீனத்தில் அரபுக்கள் யூதர்களைத் தாக்கி அவர்களில் 133 பேரைக் கொன்றனர்.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டனர். பின்லாந்து, உக்ரைன், போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியினர் லண்டன் மீது குண்டு வீச்சை ஆரம்பித்தனர்.


1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று இங்கிலாந்தில் பாடசாலை ஒன்றின் மேல் வீழ்ந்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர்.
1948 – ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.
1952 – அரபு லீக் அமைக்கப்பட்டது.
1966 – லூனார் ஆர்பிட்டர் 1 முதன் முதலாக சந்திரனின் சுற்றுவட்டத்தில் இருந்து எடுத்த பூமியின் படங்களை லூனார் ஆர்பிட்டர் 1 அனுப்பியது.
1973 – இண்டெல்சாற் தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
1975 – லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது.
1990 – ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.
1990 – மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் 3 இணையவிருப்பதாக அறிவித்தன.
2000 – பஹ்ரேய்னில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – நியூசிலாந்தின் ஆளுநராக ஆனந்த் சத்தியானந்த் பதவியேற்றார்.



பிறப்புக்கள்

1754 – பதினாறாம் லூயி, பிரெஞ்சு மன்னன் (இ. 1793)
1868 – அய்யன் காளி, தலித் போராளி (இ. 1941)
1914 – டி. எஸ். பாலையா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1972)
1919 – சுசுமு ஓனோ, ஜப்பானியத் தமிழறிஞர் (இ. 2008)
1978 – கோபி பிரயன்ட், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1951 – வ. ரா., தமிழ் எழுத்தாளர் (பி. 1889)
1997 – ஜோன் கெண்ட்ரூ, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1961)
2000 – ப. ரங்கராஜன் குமாரமங்கலம் இந்திய அரசியல்வாதி. (பி.1952)

சிறப்பு நாள்

ருமேனியா – விடுதலை நாள் (1944)
உக்ரேன் – கொடி நாள்
அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்