Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 16, 2019

முதுகலை ஆசிரியர் தேர்வு செப் 27-ல் தொடங்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு செப். 27 முதல் 29-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறஉள்ளது.

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் முது நிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும், மீதி 50 சதவீதம் போட்டித் தேர்வு மூலமும் நிரப் பப்படுகின்றன. அதன்படி அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12-ம் தேதி வெளியிட்டது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 24 முதல் ஜூலை 15-ம் தேதி அவ காசம் வழங்கப்பட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 1.85 லட் சம் பட்டதாரிகள் விண்ணப்பித் துள்ளனர்.



இந்நிலையில் முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் போட்டித்தேர்வு செப். 27 முதல் 29-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று அறி விப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரி யம் வெளியிட்ட செய்திக்குறிப் பில், “முதுநிலை ஆசிரியர் பணி களுக்கான தேர்வு இணையதளம் வழியாக செப்டம்பர் 27 முதல் 29-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 17 பாடங்கள் கொண்ட தேர்வுக்கால அட்டவணை தேர்வு வாரிய இணையத்தில் (http://trb.tn.nic.in/) வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான ஹால்டிக்கெட் விரை வில் வெளியிடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. முதுநிலை ஆசிரி யர் தேர்வு முதல் முறையாக இணையதளம் வழியாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.