Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 11, 2019

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு எண்ணிக்கை 79 லட்சத்தை தாண்டியது  அரசுப் பள்ளி ஆசிரியர் வேலைக்காக 8 லட்சம் பேர் காத்திருப்பு

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண் ணிக்கை 79 லட்சத்தைத் தாண்டி யுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்காக மட்டும் 8 லட்சத் துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 2மாநில வேலைவாய்ப்பு அலுவல கங்களும் (சென்னை மற்றும் மதுரை), 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், முதுகலை பட்டப் படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம், விவ சாயம், சட்டம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான கல்வித் தகுதியை மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.

இந்நிலையில் 2019, ஜூலை 31 நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒட்டுமொத்த பதிவுதாரர் களின் எண்ணிக்கை 79 லட்சத்து 44 ஆயிரத்து 97 ஆக உள்ளது. இதில் அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்காக காத்திருப்பவர்கள் 8 லட்சத்து 18 ஆயிரத்து 990 பேர். அவர்களில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 18 பேர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்கள். 3 லட்சத்து 61 ஆயி ரத்து 448 பேர் பட்டப் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள். 2 லட்சத்து 67 ஆயிரத்து 524 பேர் முதுகலை பட்டப் படிப்புடன் பி.எட் முடித்த வர்கள்.



பட்டப்படிப்பு அளவிலான கல்வித் தகுதியை பொறுத்தவரை யில், 4 லட்சத்து 31 ஆயிரத்து 561 பி.ஏ பட்டதாரிகளும், 5 லட்சத்து 82 ஆயிரத்து 699 பி.எஸ்சி பட்ட தாரிகளும், 2 லட்சத்து 98 ஆயிரத்து 909 வணிகவியல் பட்டதாரிகளும் பதிவு செய்துள்ளனர். அதேபோல், 2 லட்சத்து 28 ஆயிரத்து 950 பொறி யியல் பட்டதாரிகளும் 2 ஆயிரத்து 302 மருத்துவப் பட்டதாரிகளும், 6 ஆயிரத்து 815 வேளாண் பட்ட தாரிகளும், 1,540 கால்நடை மருத்துவப் பட்டதாரிகளும் 2 ஆயிரத்து 117 பி.எல் பட்டதாரிகளும் அரசு வேலைக்காகக் காத்திருக் கிறார்கள்.



ஒட்டுமொத்த பதிவுதாரர்களில் 27 லட்சத்து 30 ஆயிரத்து 524 பேர் 24 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள். 11 லட்சத்து 84 ஆயிரத்து 921 பேர் 36 முதல் 57 வயது வரையில் இருப்பவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக 7 ஆயி ரத்து 761 பேர் 58 வயதைக் கடந்த வர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.தற்போது அரசு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறவில்லை. இருந்தபோதிலும், குறிப்பிட்ட சில பணிகளுக்கு (அரசு பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர், சிறப்பாசிரியர் - தையல், ஓவியம், இசை, உடற்கல்வி) வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு குறிப்பிட்ட மதிப் பெண் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



அரசு பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர், சிறப்பாசிரியர் - தையல், ஓவியம், இசை, உடற்கல்வி போன்றவற்றுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு குறிப்பிட்ட மதிப் பெண் அளிக்கப்படுகிறது.