Breaking

Sunday, August 18, 2019

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை



பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான வகையில் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். இதை தடுக்க பள்ளி முடிந்து ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் மாணவர்களை பிரித்து வெளியே அனுப்ப வேண்டும் பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது



மேலும் பள்ளி இறைவணக்கத்தின் போது பேருந்து படிக்கட்டுப் பயணம், பேருந்து ஜன்னல் வழியே ஏறி இடம்பிடிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் சாலையைக் கடக்கும் போது இருபக்கமும் பார்த்து கடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

மேலும் பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு வந்தால் அவர்களை அனுமதிக்கக் கூடாது. உடற்பயிற்சி ஆசிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் மாணவர்களை ஒழுங்குபடுத்தி பேருந்தில் ஏற்றி விட வேண்டும்.