Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 10, 2019

ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - பள்ளிக்கல்வி துறை


பள்ளிகளுக்கான அரசு பொது தேர்வின்போது காரணம் கண்டுபிடித்து விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார். 10, 12ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெறும்போது பல ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதாக கூறப்படுகிறது. தற்போது 10,11,12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் அரசு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. வரும் ஆண்டிலிருந்து மேலும் சில வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது.


இதனால் அதிகமான பணிச்சுமைகளிலிருந்து தங்களை விடுவித்து கொள்ள போலியான காரணங்களை காட்டி ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதை கருத்தில் கொண்ட பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் 'பொதுத் தேர்வுகளின்போது முறையான காரணங்களின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.