
Miraculous information on Body Bones :
1) நம் உடலில் உள்ள எலும்புகள் உடலைத்தாங்கிப் பாதுகாக்கும் பணியைச்செய்கிறது.
2) நம் மூளை, இதயம் மற்றும் நுரையீரல்களுக்கு பாதுகாவலனாக உள்ளது.
3) சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்கள் எலும்பின் மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன.
4) ஒவ்வொரு மனிதனும் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கின்றான். ஆனால் இறக்கும்போது இருப்பது 206 எலும்புகள் மட்டுமே. .
5) குறுத்தெலும்புகள் குழந்தை பிறந்தவுடன் இணைந்து, அந்தக்குழந்தை வளரவளர வலுவான எலும்பாக மாறும்.
6) நம் எலும்புகள் உடலுக்குத் தேவையான கால்சியத்தை சேமித்து, பின்னர் வழங்கும் தன்மை பெற்றவை.
7) நம் மணிக்கட்டு வரை ஒவ்வொரு கையிலும் 27 எலும்புகளும், அதேபோல் நம் பாத மணிக்கட்டு வரை ஒவ்வொரு காலிலும் 26 எலும்புகளும் உள்ளன. அதாவது, நமது இரு கை கால்களில் மட்டும் 50 சதவீத எலும்புகள் உள்ளன.
8) காதிலுள்ள 'ஸ்டேப்ஸ்' என்னும் எலும்புதான் உடலிலேயே மிகச்சிறிய எலும்பு ஆகும். இது, 2.5 மில்லி மீட்டர் அகலம் உள்ளது.
9) நமது முழங்கையில் உள்ள நீண்ட எலும்பின் பெயர் ஹுமரஸ்.
10) மனித உடலில் நாக்கின் கீழ் ஒரு எலும்பு உள்ளது. இதை 'வி' (V) எலும்பு என்பார்கள். கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள், அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். உடலில் உள்ள எலும்புகளில் அடிபடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.


