Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 28, 2019

எல்லா வீடுகளுக்கும் இண்டர்நெட் கனெக்சன் ! தமிழக அரசின் அதிரடி திட்டம் !!


தமிழகத்தில் தற்போது பெரிய பேருந்து நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் இலவசமாக இணைய தளவசதி செய்து தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அரசு அலுவலகங்களில் காகிதம் இல்லாத நிலையை அடைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என தெரிவித்தார்.


அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இணையதள வசதியை மேம்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் ஆர்.பி.
உதயகுமார் மத்திய அரசின் உதவுயோடு விரைவில் அனைத்து இல்லங்களிலும் இணைய வசதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் போது, சான் பிரான்சிஸ்கோவில் செயல்படுத்தப்பட்டு வரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை, தமிழகத்திலும் கொண்டு வரும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்

No comments:

Post a Comment