Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 2, 2019

கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் தைராய்டு


சாதாரண நேரங்களைவிட கர்ப்பம் தரித்த சமயங்களில் ஒரு பெண் அதிகப்படியான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒரு கோளாறும் நமது உடலை அண்டுவதாக இருந்தாலும் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடாகவே இருக்க முடியும். அந்த வகையில் கர்ப்ப காலத்தில் தைராய்டு ஹார்மோன் சுரப்பு ஏற்றதாழ்வுடன் இருந்தால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.



கர்ப்பம் தரிக்கும் முன்னர் ஒரு பெண்ணுக்கு தைராய்டு பிரச்னை இருந்தால் அது கருவுருவாவதில் அதிக பிரச்னையை உண்டாகும். அதோடு கர்ப்பம் தரித்த பிறகு தைராய்டு பிரச்னை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. தைராய்டு ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே முறையான சிகிச்சை பெறுவது அவசியம். தாயின் உடம்பில் சுரக்கும் அதிகப்படியான தைராய்டின் காரணமாக பிறக்கும் குழந்தையின் மனவளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


தாயின் தைராயிடு பிரச்னையால் பாதிக்கப்படும் குழந்தைக்கும் தைராய்டின் நிலையற்ற தன்மை தொடர்பான கோளாறுகள் வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே கர்ப்பகாலத்தில் முறையான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் தைராய்டு பிரச்னையால் குழந்தையின் வளர்ச்சியில் அதிக பாதிப்பு உண்டாகும். அதிகமாக சுரக்கும் தைராய்டு காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கர்ப்பப்பையில் பாதிப்பு ஏற்பட்டு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கும் அபாயம் உள்ளது.