Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 22, 2019

பள்ளிக்கல்வித்துறையில் விளையாட்டு போட்டிகளில் புதியமாற்றம்


2019 - 20 விளையாட்டு ஆண்டில், இதுவரை இருந்த நடைமுறைகளில் மாணவர் நலன் சார்ந்து சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதாக பள்ளிக் கல்வி துறை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.

இதுவரை கல்வி மாவட்டத்தோடு முடித்து வைக்கப்பட்ட Under 14 பிரிவிற்கான விளையாட்டுப் போட்டிகள், இந்தாண்டு முதல் மாநில போட்டி வரை அனுமதிக்கப்படுகிறது

வட்டப்போட்டிகள் புதிதாக துவக்கப்பட்ட கல்வி மாவட்டங்களை கருத்தில் கொண்டு, சிறுசிறு மாற்றங்களோடு தொடர்ந்து நடைபெறும்

கல்வி மாவட்டப்போட்டிகள் அறவே நீக்கம் செய்யப்பட்டு, வட்ட அளவில் வென்ற அனைத்து அணிகளும் வருவாய் மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்று, வருவாய் மாவட்ட அளவிலான போட்டி நடைபெறும்



வருவாய் மாவட்ட அளவில் வென்ற முன்று அணிகள், அடுத்த நிலையான மண்டலப்போட்டிக்கு தகுதி பெறும்

மண்டலங்களை சேர்த்தோ, பிரித்தோ சிறுசிறு மாற்றங்களோடு மண்டலங்களை பிரித்து மண்டல போட்டிகள் நடத்தப்படும். முதலிடம் பெற்ற அணி மாநில போட்டிக்கு தகுதி பெறும், மேலும் முதல் மூன்று அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மாநில அளவிலான போட்டிகள் வழக்கம் போல் நடைபெறும், புதிய விளையாட்டுகளில் வெல்லும் முதல் மூன்று அணிகளின் முக்கிய வீரர்கள் SGFI போட்டிக்கு தகுதிபெறுவர்கள்.