Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 22, 2019

உங்க மொபைல்... ரொம்ப SLOW-வா இருக்கா?... இதுதான் காரணம்..!



இன்றைய நவீன உலகில் ஆன்ராய்டு மொபைலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. ஆன்ராய்டு மொபைலை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எவ்வாறு பயன்படுத்தக்கூடாது? என்பதை பற்றி பார்ப்போம். உங்கள் தொடர்புகளை போனில் சேமிப்பதை தவிர்த்து, உங்கள் கூகுள் கணக்குக்கு எல்லா தொடர்புகளையும் பேக் அப் செய்வது நல்லது. உங்கள் ஆன்ராய்டு போனுக்கு பாதுகாப்பு தேவை.


அதனால் போனுக்கு கடவுச்சொல் கொண்டு லாக் செய்து வைக்கவும். உங்கள் மொபைலில் அனிமேஷன்கள் போன்ற ஆப்ஸ் இருந்தால் மொபைலின் வேகத்தை குறைக்கலாம். உங்கள் மொபைல் மெதுவாக இயங்க RAM பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். இன்டெர்னல் ஸ்டோரேஜ் குறைவாக இருந்தால் கூட மொபைல் மெதுவாக இயங்கும். உங்கள் மொபைலை ரீசெட் (RESET) செய்யாமல் தொடர்ந்து பயன்படுத்தி இருக்கலாம். உங்கள் ஆன்ராய்டு; மொபைலை நார்மல் மோடிலிருந்து Aeroplane மோடுக்கு மாற்றுவதால் பல அப்ளிகேஷன்கள் பேட்டரி சேமிப்பை விரையமாக்காது.
எனவே மிக விரைவாக சார்ஜ் ஆகும். பெர்சனல் கணினி அல்லது லேப்டாப் வைத்து இருப்பவர்கள் தங்கள் கணினியில் உள்ள யுஎஸ்பி போர்ட் மூலம் சார்ஜ் செய்கிறார்கள். இது மொபைலுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். சார்ஜர் மூலம் மட்டுமே சார்ஜ் செய்வது நல்லது. இரவு நேரங்களில், மொபைலை அதிகம் பயன்படுத்தாத நேரங்களில் மொபைலை Power Saver மோடுக்கு மாற்றிவிடுங்கள்.


இதனால் கூடுதல் மின்சேமிப்பு கிடைக்கும். நம் மொபைலில் எப்போதாவது பயன்படுத்தும் ஆப் நிறைய இருக்கும். சான்றாக Bluetooth, GPS, Wi-Fi போன்றவற்றை ஆப் செய்து வைப்பதே நல்லது. இதனால் கூடுதல் மின்சேமிப்பு கிடைக்கும். லேப்டாப்பின் பேட்டரி பேக்-அப் மூலம் சார்ஜ் செய்தால் மெதுவாக தான் சார்ஜ் ஆகும். ஆகையால் அதை தவிர்க்க வேண்டும். சில சமயம் எல்லாமே சரியாக இருக்கும், ஆனாலும் சார்ஜ் ஆகாது. அந்த நேரத்தில் ப்ளக் மற்றும் வயர் கனெக்ஷன்களை சரி பார்க்க வேண்டும். விலை குறைந்த சார்ஜர்கள் மிகவும் மெதுவாக தான் சார்ஜ் ஆகும். ஆகையால் அதையும் தவிர்த்திடுங்கள்.