Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 7, 2019

பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் விவரம்: செப்.11-க்குள் அனுப்ப உத்தரவு


பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதவுள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்களையும் வரும் செப்.11-ஆம் தேதிக்குள் சேகரித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தேர்வுத் துறை மேற்கொண்டுள்ளது.


இது தொடர்பாக அனைத்து மாவட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், அரசு தேர்வுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதும் வகையில், அவர்களின் விவரங்களைப் பள்ளிகள் சேகரித்து, வரும் 11-ஆம் தேதிக்குள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். முதன்மைக் கல்வி அதிகாரிகள் இந்த விவரங்களை சரிபார்த்து, அரசு தேர்வுத் துறை அலுவலகத்துக்கு செப். 13-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


கடந்த ஆண்டில், பிளஸ் 1 படித்த அனைத்து மாணவர்களின் விவரங்களும், பிளஸ் 2 தேர்வுக்கான பட்டியலில் இடம் பெற வேண்டும். எந்த மாணவரின் பெயரும் விடுபடக் கூடாது. அவர்கள் வேறு பள்ளிக்கு மாறியிருந்தாலும், அவர்களின் விவரங்களை, புதிய பள்ளிகளில் இணைத்து வழங்க வேண்டும் என அரசு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment