Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 7, 2019

தமிழக கூட்டுறவு வங்கிகளில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்பு!



தமிழக கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 1478 உதவியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி : உதவியாளர், கிளார்க்
சம்பளம் : மாதம் ரூ.11,900 - 32,450 வயதுவரம்பு : 01.01.2001 தேதியின் கீழ் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்



தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்பிடிப்புடன் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலை படிப்பின் போது தமிழ்மொழியை ஒரு பாடாமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாட்டில் அடிப்பைட அறிவு வேண்டும். விண்ணப்ப கட்டணம் : விண்ணப்ப பதிவு மற்றும் எழுத்து தேர்வு கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அனைத்து பிரிவு சார்ந்த மாற்று திறானாளிகள், ஆதரவற்ற விதவைகள் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் எஸ்.பி.ஐ இணையதளத்தில் உள்ள SBI Collect என்ற சேவையை பயன்படுத்தி செலுத்தலாம்.



தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்கள் மாவட்ட அரசு இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

No comments:

Post a Comment