Breaking

Monday, September 30, 2019

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதாமல் திரும்பி சென்ற விண்ணப்பதாரர்கள்: அதிர்ச்சி தகவல்



சென்னை அடுத்த ஆவடியில் சர்வர் கோளாறு காரணமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுத முடியாமல் ஏராளமான தேர்வர்கள் திரும்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது



முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு, ஆன்லைன் மூலமாக கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் உள்ள ஆலிம் பொறியியல் கல்லூரியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு காலை மற்றும் மதியம் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது



இந்த நிலையி சர்வர் கோளாறு காரணமாக காலையில் தேர்வு எழுத வந்தவர்களுக்கு வினாத்தாள் கொடுக்காமல் மதியம் வரை காக்க வைத்து அதன்பின் காலையில் தேர்வு எழுத வந்தவர்களுக்கு மதியம் ட்தான் தேர்வு எழுத தொடங்கினர். இதனால் மதியம் தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வறைக்கு வெளியே நீண்ட நேரமாக காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து மனஉளைச்சல் அடைந்த பலர் தேர்வு எழுதாமலையே திரும்பிச் சென்றனர்.