Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 24, 2019

'நுரையீரலை கவசம் போல் பாதுகாக்கிறது துாதுவளை'

காற்று மாசால், ஆரோக்கியம் பாதிக்குமா?மனிதர்களை அச்சுறுத்தும், 10 ஆரோக்கிய பிரச்னைகளை, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதில், காற்று மாசு, முக்கிய இடத்தில் உள்ளது. சென்னை, டில்லி உட்பட, இந்திய நகரங்களில் மட்டுமல்ல, உலகம் முழுவதும், காற்று மாசு பெரிய பிரச்னையாகி விட்டது.



நாம் பின்பற்றுகிறோமோ, இல்லையோ, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி பற்றி, குறைந்த பட்சம் பேசுகிறோம், படிக்கிறோம், சொல்கிறோம்.ஆனால், நம் உடலில், நாம் அக்கறையே செலுத்தாமல் இருக்கும் ஒரு உறுப்பு என்றால், அது நுரையீரல் மட்டும் தான்.காற்று மாசு, நுரையீரலை எந்தளவு பாதிக்கும்?நுரையீரல், சுவாசப் பைகள் மாசடையும். பிராங்கைடிஸ், ஆஸ்துமா, அலர்ஜி, கேன்சர் என, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் வரும். காற்றில் உள்ள மாசால், சர்க்கரை நோய் வரும் எனச் சொன்னால் நம்புவீர்களா...