Breaking

Monday, November 18, 2019

பயோமேட்ரிக் இயந்திரங்களின் இயக்கக் குறைபாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்


பயோமேட்ரிக் இயந்திரங்களின் இயக்கக் குறைபாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்.கிராமப்புற பள்ளிகளில் உள்ள பயோமெட்ரிக் சாதனங்களுக்கான இணைய சேவை வேகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.




ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.சி. கருப்பணன், செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயோமேட்ரிக் இயந்திரங்களுக்கான இணைய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.