Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 29, 2019

லேப்டாப்' சிக்கலில் தலைமை ஆசிரியர்கள் 'எஸ்கேப்' ஆகும் அதிகாரிகள்

தமிழகத்தில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் குழப்பமான உத்தரவுகளால் தலைமை ஆசிரியர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

பிளஸ் 2 முடித்தோருக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப், புதிய பாடத் திட்டத்தின்கியூ.ஆர்.,கோடு தொழில்நுட்பம் காரணமாக இந்தாண்டு பிளஸ் 1க்கும் வழங்கப்படுகிறது. 2017 - 2018ம் ஆண்டில் பிளஸ் 2 முடித்தோருக்கு (தற்போது கல்லுாரியில் 2ம் ஆண்டு படிப்போர்) ஒதுக்கப்பட்ட லேப்டாப்கள், தற்போது பிளஸ் 1 மாணவருக்கு வழங்கப்பட்டு விட்டது. இதனால் 2017-18ல் பிளஸ் 2 முடித்தோர் போராட்டங்களில் ஈடுபடுட்டனர்.




இதையடுத்து அவர்களுக்கும் செப்.,ல் லேப்டாப் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அவற்றை வழங்கும் உத்தரவு நவ.,1 வெளியிடப்பட்டது. இது தலைமை ஆசிரியர்களுக்கு 'தலைவலி' ஏற்படுத்தியுள்ளது.அவர்கள் கூறியதாவது:பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவருக்கும் இதுவரை லேப்டாப் வழங்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு உத்தரவில் 'தற்போது உயர்கல்வி பயிலும் (பாலிடெக்னிக் உட்பட) தகுதியுள்ளோருக்கு மட்டும் வழங்க வேண்டும். தோல்வியடைந்த, உயர் கல்வி பயிலாதோருக்கு வேண்டாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.




மேலும் நர்சிங், ஐ.டி.ஐ., கூட்டுறவு மற்றும் அஞ்சல் வழியில் டிகிரி படிப்போர் குறித்து விவரமும் இல்லை. இதனால் மாணவர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்தால் 'பெற்றோர்- மாணவர்களை மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வரச்சொல்லாமல் நீங்களே சமாளியுங்கள்' என்கின்றனர். நிலவரம் தெரியாமல் ஏ.சி. அறையில் இருந்து சிலர் எடுக்கும் குழப்பமான முடிவால் பெரும் தலைவலியாக உள்ளது ,என்றனர்.