Breaking

Monday, November 25, 2019

குழந்தைகளுக்கு அடிக்கடி பிரட் ஜாம் கொடுக்கும் வழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திவிடுங்கள்.



குழந்தைகளுக்கு அடிக்கடி பிரட் ஜாம் கொடுக்கும் வழக்கம் இருந்தால் உடனடியாக நிறுத்திவிடுங்கள். பிரட் மற்றும் ஜாம் குழந்தைகளின் உடலை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதுதான் இந்த தொகுப்பு.




பிரட், மைதா மாவில் செய்யப்படுவது என்பதால் குழந்தைகளின் சீரனசக்தியை பாதிக்கும். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இது அமையும். நாம் டிவி விளம்பரத்தில் பர்ப்பதற்கு வேண்டுமானால் ஜாம் சுவையாக இருப்பதுபோல் தெரியலாம்.
ஆனால் அரை ஸ்பூன் ஜாமில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு சர்க்கரை இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு அதிகபடியாக கேலோரிகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் ஜாமில் எந்த ஊட்டசத்தும் இல்லை. மேலும் பழங்களை அதிக வெப்பத்தில் வேக வைத்துத்தான் ஜாம் தயாராக்கப்படுகிறது. இதனால் பழங்களில் இருக்கும் சத்துக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது.




குழந்தைகளுக்கு காலையில்தான் புரோட்டின் மற்றும் மற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை கொடுக்க வேண்டும் ஆனால் பிரட் மற்றும் ஜாமில் அது இல்லை. எனவே சமைக்க ஏதும் இல்லை என்பதாலோ , சோம்பலாக இருக்கிறது என்பதால் குழந்தைகளுக்கு பிரட் ஜாம் கொடுக்காதீர்கள் .