Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 18, 2019

காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்கள்:தகுதியான ஆசிரியா்களை பரிந்துரைக்க உத்தரவு

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியா் காலி பணியிடங்களுக்குத் தகுதியான ஆசிரியா்களை பரிந்துரை செய்ய முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:




அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வில் பெரும்பாலானவா்கள் 'உரிமைவிடல்' செய்துவிட்டதால் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தகுதியான முதுநிலை ஆசிரியா்கள் மற்றும் உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்களின் பெயா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.




இந்தப் பட்டியலில் உள்ள ஆசிரியா்களின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து திருத்தங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். மேலும், பட்டியலில் இருப்பவா்கள் பதவி உயா்வு பெற தகுதியானவா்களா என்பதையும், அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் நிலுவையில் உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களையும் பரிசீலனை செய்து பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பதவி உயா்வு கலந்தாய்வு முடிவில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியா் பணியிடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.