Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 24, 2019

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜன.2ம் தேதி நடப்பதால் ஜன.3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை

அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் ஜனவரி 3-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.




தமிழக பள்ளிகளில் கடந்த சில நாட்களாக அரையாண்டு தேர்வு நடைபெற்று வந்த நிலையில், அந்த தேர்வுகள் இன்றோடு முடிவடைந்தது. இதையடுத்து அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் என அனைத்துக்கும் சேர்த்து இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, மறுப்பக்கம் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் வருகிற 27,30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்படுகிறது. அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.




இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ஜனவரி 2ம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளிகள் ஜனவரி 3ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உள்ளாட்சி தேர்தல், கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு ஜனவரி 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது