Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 28, 2019

மாதம்தோறும் 20 பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு

ஒவ்வொரு வட்டார கல்வி அலுவலரும், மாதம்தோறும், 20 பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்' என, தொடக்க கல்வி இயக்குநர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.




இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு பள்ளிகளின் தரத்தையும், உள்கட்டமைப்பு வசதியையும் உயர்த்தும் வகையில், பள்ளிகளில் திடீர் ஆய்வை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். வட்டார கல்வி அலுவலர்கள், தொடக்க நடுநிலை பள்ளிகளில் திடீர் ஆய்வும், ஆண்டு ஆய்வும் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாதமும், குறைந்தபட்சம், 20 பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது, தலைமை ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்காமல், திடீரென ஆய்வுக்கு செல்ல வேண்டும்.




அப்போது, பள்ளிகள் இயங்கும் முறை, பாடம் நடத்தும் விதம், பள்ளி செயல்பாடு, வருகைப்பதிவு விபரம், நலத் திட்ட செயல்பாடு, மாணவர்களின் கற்றல் திறன் போன்றவற்றை, ஆய்வு செய்ய வேண்டும்.ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், கணினி வழியாக கற்று தருதல், உடற்கல்வி, யோகா வகுப்புகள் குறித்து, மாணவர்களிடம் நேரடியாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கில பயிற்சி குறித்த விபரங்களையும் தெரிந்து, உயர் அதிகாரிகளிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.