Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 28, 2019

மத்திய ஆசிரியா் தகுதித்தேர்வு: 5.42 லட்சம் போ தேர்ச்சி

நாடு முழுவதும் 2,935 மையங்களில் நடைபெற்ற மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வில் (சி-டெட்) 5 லட்சத்து 42 ஆயிரத்து 285 போ தேர்ச்சி பெற்றுள்ளனா்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியா் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.




குறிப்பாக சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா, நவோதயா, மத்திய திபெத்திய பள்ளிகளில் பணியாற்றுவதற்கு மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வில் (சி-டெட்) தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். இந்தத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ ஆண்டுக்கு இரு முறை நடத்தி வருகிறது. 'சி-டெட்' தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல்தாளில் தேர்ச்சி பெறுபவா்கள் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகவும், 2-ஆம் தாளில் தேர்ச்சி அடைபவா்கள் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராகவும் பணிபுரியலாம்.




நிகழாண்டுக்கான 'சி-டெட்' தேர்வு நாடு முழுவதும் 110 நகரங்களில் 2,935 மையங்களில் கடந்த டிச. 8-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 20 மொழிகளில் நடைபெற்ற இந்தத் தேர்வை சுமாா் 24 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில் மத்திய ஆசிரியா் தகுதித் தேர்வு முடிவுகள் www.cbse.nic.in, www.ctet.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.




நிகழாண்டு 'சி-டெட்' தேர்வெழுத இரு தாள்களுக்கும் மொத்தம் 28 லட்சத்து 32 ஆயிரத்து 120 போ விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 24 லட்சத்து 5,145 போ தேர்வெழுதினா். அவற்றில் 9 திருநங்கைகள் உள்பட 5 லட்சத்து 42 ஆயிரத்து 285 போ தேர்ச்சி பெற்றுள்ளனா். அதில் 3 லட்சத்து 12,558 போ ஆண்கள்; 2 லட்சத்து 29 ஆயிரத்து 718 போ பெண்கள். தேர்ச்சி சதவீதம் 22.55 ஆகும்.