Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 8, 2019

காவலன் எஸ்ஓஎஸ் செயலி: மாணவியருக்கு விழிப்புணர்வு

புதுவண்ணாரப்பேட்டை: &'&'இரவில் தனியாக செல்லும் பெண்கள், பாதுகாப்பற்ற சூழலை உணரும்போது, &'காவலன் செயலி&'யை பயன்படுத்த வேண்டும்,&'&' என, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி கூறினார்.புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலையில் உள்ள அரசு கலை கல்லுாரியில், &'காவலன் செயலி&' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று மதியம் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி கூறியதாவது:பெண்களின் பாதுகாப்பை கருத்தில் வைத்து, தமிழக காவல் துறை சார்பில், &'காவலன் எஸ்ஓஎஸ்&' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



இரவில் தனியாக செல்லும் பெண், பாதுகாப்பற்ற சூழலை உணரும்போது, செயலியில் உள்ள, &'எஸ்ஓஎஸ்&' என்ற பட்டனை அழுத்தினால் போதும்.உடனே, அவரது இருப்பிடம் குறித்த தகவல், 15 வினாடி வீடியோ எடுத்து, ஜி.பி.எஸ்., மூலம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும்.மொபைல் போன் சிக்னல் கிடைக்காத இடங்களில், குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும். அடுத்த சில நிமிடங்களிலேயே, காவல் துறை ரோந்து வாகனம், அந்த பெண் இருப்பிடத்திற்கு சென்று விடும். இந்த செயலியை, &'கூகுள் பிளே ஸ்டோர்&' மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.