Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, December 23, 2019

சேதமான பள்ளி கட்டடங்கள் இடிக்க கல்வித்துறை உத்தரவு

அரசு பள்ளிகளில் உள்ள பழைய, சேதமான கட்டடங்களை இடித்து அகற்றும்படி, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.




தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், தேவையான இடங்களில், புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டவும், பழைய கட்டடங்களை அகற்றவும், கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பழைய, சேதமான கட்டடங்களை உடனடியாக இடித்து அகற்றும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.




ஏற்கனவே, பல பள்ளிகளில் பழைய கட்டடங்களை இடிக்க, இரண்டு மாதங்களுக்கு முன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விடுபட்ட பள்ளிகளின் கட்டடங்களை, இந்த அரையாண்டு தேர்வு விடுமுறையில், பொதுப்பணித்துறை உதவியுடன் அகற்றும்படி,முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.