Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 6, 2020

அரசு ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு!!

ரத்ததானம் அளிக்கும் அரசு ஊழியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது . ஆண்டொன்றுக்கு 4 முறை அத்தகைய விடுப்பு வழங்கப்படும் என் றும் , அதற்கு உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது .




மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் , ரத்த தானம் அளிப்பதை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி , அத்தகைய நற்பணிகளில் ஈடுபடுவோருக்கு விடு முறையும் அளிக்கப்பட்டு வந்தது .




இந்நிலையில் , அது ஊதியத்துடன் கூடிய விடுப்பாக தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது . ரத்த தானம் மட்டுமன்றி ரத்த அணுக்கள் , தட்டுக்கள் ஆகியவற்றை தானமாக அளிப்பவர்களுக்கும் இது பொருந்தும் என மத்திய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது . அரசால் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் ரத்த தானம் அளித்து அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .