Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 7, 2020

அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறையின் திடீர் அறிவிப்பு!


இரண்டாம் பருவத்துக்குரிய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவற்றை புத்தக வங்கியில் பாதுகாத்து வையுங்கள் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.




இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், '2ஆம் பருவத்திற்குரிய 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான, மீண்டும் பயன்படுத்தும் வகையிலுள்ள, அனைத்து பாடப் புத்தகங்களையும் மாணவர்களிடம் இருந்து பெற்று பள்ளி புத்தக வங்கியில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.