Join THAMIZHKADAL WhatsApp Groups

பெங்களூருவில் செயல்பட்டு வரும் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 200-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
ISRO Recruitment 2020
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) செயற்கைக்கோள் மையத்தில் U R Rao Satellite Centre பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டெக்னீசியன், வரைவாளர், தொழில்நுட்ப உதவியாளர், அறிவியல் உதவியாளர், நூலக உதவியாளர், இந்தி தட்டச்சர், கேட்டரிங் உதவியாளர், ஓட்டுநர் என பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இஸ்ரோ டெக்னீசியின் பி பிரிவு பணிகளுக்கு மொத்தம் 102 காலிப் பணியிடங்கள் உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 50, ஃபிட்டர் - 17, எலெக்ட்ரிக்கல் - 11, பிளம்பர் - 4, ஏசி மெக்கானிக் - 8, டர்னர் - 3, மெஷினிஸ்ட் - 3, மோட்டார் வாகன மெக்கானிக் - 1, போட்டோகிராபி - 1, மெஷினிஸ்ட் - 1, எலெக்ட்ரோபிளேட்டிங் - 1, வெல்டர் - 1 ஆகியவை ஆகும். இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டிராப்ட்ஸ்மேன் எனும் வரைவாளர் பணியிடத்திற்கு மெக்கானிக்கல் துறையில் 3 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ மெக்கானிக்கல் வரைவாளர் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 41 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மெக்கானிக்கல் - 13, எலெக்ட்ரானிக்ஸ் - 17, கம்ப்யூட்டர் சைன்ஸ் - 5, ஆட்டோமொபைல் - 1, எலெக்ட்ரிக்கல் - 2, இன்ஸ்ட்ரூமென்டேசன் - 2, சிவில் - 1 என பல்வேறு துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நூலக உதவியாளர் பணிக்கு 4 காலியிடங்களும், அறிவியல் உதவியாளர் பணிக்கு 7 காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. நூலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நூலக அறிவியல் துறையில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். சைன்டிபிக் அசிஸ்டெண்ட் பணிக்கு வேதியியல், இயற்பியல், மல்டிமீடியா, எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளது. இதற்கு முதல் வகுப்பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதே போல இந்தி தட்டச்சர் - 2, கேட்டரிங் அட்டெண்டன்ட் - 5, சமையலர் பணிக்கு - 5, ஃபையர்மேன் - 4, இலகுரக வாகன ஓட்டுநர் - 4, கனரக வாகன ஓட்டுநர் - 5 உள்ளிட்ட பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, திறனறிவுத்தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அந்தந்த துறைகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ISRO அறிவிப்பு வெளியான நாள் : 15 பிப்ரவரி 2020
ISRO விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 15 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 6 மார்ச் 2020
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.isac.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்து, மார்ச் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ISRO அறிவிப்பு வெளியான நாள் : 15 பிப்ரவரி 2020
ISRO விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள் : 15 பிப்ரவரி 2020
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 6 மார்ச் 2020