Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 21, 2020

27.03.2020 ஆம் தேதியில் ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்துடன் , சமூகத் தணிக்கை ஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும் - CEO செயல்முறைகள்!


சமூகத் தணிக்கை ஆய்வு நடைமுறைப்படுத்தும் முறை ' சமூகத் தணிக்கை குழுவில் , பள்ளி மேலாண்மைக் குழுவில் பொறுப்பு வகிக்கும் பெற்றோர் சார்ந்த ஒருவர் , பள்ளி மேலாண்மைக் குழுவை சாராத பெற்றோர் ஒருவர் , தலைமை ஆசிரியர் , ஆசிரியர் கிராமக் கல்வி உறுப்பினர் உள்ளாட்சி உறுப்பினர் ஒருவரை இடம் பெறச் செய்தல் வேண்டும்.
தலைமை ஆசிரியர் சமூக தணிக்கையின் போது பள்ளி பதிவேடுகள் , கணக்கு பேரேடுகள் , தேவைப்படும் பிற ஆவணங்களை பார்வைக்கு கொண்டு வர வேண்டும்.



பள்ளியின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை சமூக தணிக்கை குழு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பள்ளியின் நிதி மற்றும் கணக்கு மற்றும் விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் , சமூக மற்றும் ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் . மக்களை ஊக்கப்படுத்துவதுடன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் ஐயங்களை சமூக தணிக்கை குழுவினரிடம் கேட்டு தெளிவு பெற வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
பள்ளியின் அன்றாட செயல்பாடுகள் திறம்பட அமைய சமூக தணிக்கையின் முடிவுகளை பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் கிராமசபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் உறுதி செய்தல் வேண்டும் .








No comments:

Post a Comment