Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 25, 2020

ஆதார் பான் கார்டு இணைப்பு.. ஜூன் 30 வரையில் கால அவகாசம் நீட்டிப்பு!



டெல்லி: வீதிகளில் தக்காளி விற்கும் வியாபாரி முதல் முகேஷ் அம்பானி வரையிலும், கொரோனாவின் உக்கிர தாண்டவத்தினால் நஷ்டத்தினை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
இந்த கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.



இந்த நிலையில் மார்ச் 31 ஆதார் பான் இணைப்புக்கு காலக்கெடுவாக கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது இன்னும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் மார்ச் 30வுடன் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், ஆதார் எண்ணுடன் பான் கார்டினை இணைக்க ஜூன் 30, 2020 வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஏற்கனவே பல முறை இந்த கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், இனியும் இது நீட்டிக்கப்படாது. ஏனெனில் ஏற்கனவே போதிய அவகாசம் கொடுத்தாயிற்று.


அதனால் இந்த முறையும் அவகாசம் கிடைக்காது என்று கூறப்பட்டு வந்த நிலையில், நாட்டில் பரவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் இந்த அவகாசத்தினை நீட்டித்துளள்து மத்திய அரசு.
மத்திய நேரடி வரிகள் வாரியமும் (CBDT), ஆதார் எண்ணின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கடந்த 2016-17ம் ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் தங்களின் பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காவிட்டால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் அப்போது அறிவுறுத்தியது.



இந்த நிலையில் 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த சட்டத்தின் படி பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டது. எனினும் இதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்ததால், பல முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இறுதியாக தற்போது ஜூன் 30, 2020 என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment