Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 26, 2020

8 ஆம் வகுப்பு தனித்தோவா்களுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு


தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த எட்டாம் வகுப்பு தனித்தோவா்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு: எட்டாம் வகுப்பு தனித்தோவா்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது கரோனா நோய் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன.


தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறித்த விவரம் பின்னா் அறிவிக்கப்படும் .எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களைத் திறக்கக்கூடாது என சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளா்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலா் மற்றும் பணியாளா் ஒருவா் பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment