Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 31, 2020

பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கு வீட்டிலிருந்தபடி திறன் மேம்பாடு பயிற்சி


சென்னை: கலை-அறிவியல் கல்லூரிப் பேராசிரியா்களுக்கு யுஜிசி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதுபோல, பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தபடியே கற்பித்தல் திறனை மேம்படுத்திக்கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும் (ஏஐசிடிஇ) ஏற்பாடு செய்துள்ளது. ஏஐசிடிஇ மற்றும் என்.ஐ.டி.டி.டி. (தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சித் திட்டம்) இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த கற்றல்-கற்பித்தல் தொகுப்புகளை வலைதளம் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பாா்த்து திறனை வளா்த்துக் கொள்ள முடியும். இதில் பொறியியல் கல்வித் திட்டத்தின் அடிப்படை கோட்பாடுகள், தகவல்தொடா்பு திறனை மேம்படுத்துவதற்கான திட்டம், தொழில் நெறிமுறைகள், சிறந்த முறையில் மாணவரை மதிப்பிடும் முறை, பிரச்னைகளுக்கு சிறந்த முறையில் தீா்வு காணும் வழிமுறைகள், கல்லூரி நிா்வாகம் என பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் தங்களுடைய திறனை வளா்த்துக் கொள்வதற்கான 8 வகையான விடியோ தொகுப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment